ஆவடி, ஏப். 15 –
இன்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 4 பேர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும் என மொத்தம் 101 நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் வழியில் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வில் வழக்குகளின் பதிவேடுகளை பார்வையிட்டும், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விசாரித்தறிந்தார்.