இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடன் நடைப்பெற்ற செய்தியளர்கள் சந்திப்பில் நேற்று நடைப்பெற்ற சட்டமன்ற நூற்றாண்டு விழா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் திருவுருப் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு எதிர் கட்சியான அதிமுகவிற்கு முறையாக அழைப்பு விடப்பட்டதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர், குடியரசுத் தலைவர் ஆளுநர் முதலமைச்சர் அமரும் வரிசையில் அவர்களுக்கு இடம் அளிப்போம் என்று கூறி அழைத்தோம். என்றார். அது குறித்த செய்தியாளார்கள் சந்திப்பில் பின்வருமாறு உரையாடல்கள் நடைப்பெற்றது.

சென்னை ஆக 3 –

இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பதில்கள் அளித்தார். அதில் முதன்மையாக கேட்கப் பட்ட கேள்வி நேற்று நடைப்பெற்ற சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் திருவுருவ படத்திறப்பிற்கு எதிர்கட்சியான அதிமுகவிற்கு முறையான அழைப்பு அரசின் சார்பில் விடுக்கப் பட்டதா என்பதற்கு, அமைச்சர் ஆம், அழைப்பு விடுத்தோம் ஆனால் அவர்கள் கலந்துக் கொள்ள வில்லை, கலந்துக் கொள்வதும் கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம் ஆனால் எதிர்கட்சித் தலைவரை மேடையில் அமர வைக்க வேண்டும் அவர்களுடைய ஒத்துழைப்போடு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் . என முதலமைச்சர் நினைத்தார் விழா நடத்த திட்டமிட்ட போது முதலமைச்சர் எனை அழைத்து எதிர்கட்சித் தலைவரை தொடர்புக் கொண்டு விழாவிற்கு வருகை தர வேண்டும் எனவும் குடியரசுத்தலைவர், ஆளுநர் ,முதலமைச்சர் ஆகியோர் அமரும் வரிசையிலயே அவர்களுக்கும் இடம் ஒதுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரிடம்  கூறுமாறும் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரைக்க வேண்டும் எனவும், இதுப்பற்றி எதிர்கட்சித் தலைவரிடம் கூறி அழைத்திடும் படி  எனக்கு அறிவுறுத்தினார். நானும் அவ்வாறே அவரிடம் விவரங்களை கூறி அழைப்பு விடுத்தேன்

அதற்கு அவர் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து கூறுவதாக கூறினார். ஆனால் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை என்பதை என்னிடம் கூறாமல் சட்டப் பேரவை செயலாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் கூறும் காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் படத்திறப்பு விழாவில் திமுக பங்கேற்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவது போலவே, எங்களுக்கும் அழைப்பு அனுப்பினார். எதிர் கட்சியான எங்களுக்கு அந்த விழாவில் நாங்கள் கலந்துக் கொள்ள உரிய மரியாதை அளிக்கப் படவில்லை ஆனால் நாங்கள் என்றும் உரிய மரியாதையை அவர்களுக்கு அளிப்போம். என்றார்.

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணமலை கலந்துக் கொண்ட நிகழ்வுக் குறித்த கேள்விக்கு கலந்துக்கொண்டதை முழுமனதுடன் வரவேற்கிறேன், நல்ல உள்ளத்தைப் பாராட்டுகிறேன் என்றார்.

மேலும் கர்நாடாக முதலமைச்சர் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவேன் என்கிறாரே என்றக் கேள்விக்கு அவர் பதிலளிக்கயில் உச்ச நீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம் ஆகியவற்றின் தீர்ப்பை மதிக்க வேண்டும் தீர்ப்பையும் நீதிமன்ற கருத்தையும் ஏற்க மாட்டோம் என கர்நாடாக முதல்வர் கூறுவது ஏற்புடையதல்ல அவரின் தந்தை பொம்மை அவர்கள் தலைவர் கலைஞரோடும் தமிழத்தின் மீதும் பற்றும் நட்புறவும் கொண்டவர். அவருடைய வழியில் நட்புணர்வோடு கர்நாடாக முதல்வர் செயல் படுவார் என நம்புகிறோம்.

மார்க்கண்டேய நதியில் அணை கட்டியுள்ளார்களே நடுவர் மன்றம் அமைத்திடும் முயற்சியை தமிழக அரசு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப் படுகிறதா என்கிற கேள்விக்கு அணைக்கட்டும் போதே மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டு நிலுவையில் உள்ளது. அணைக் கட்டுவதற்கு தடை விதிக்காமல் நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை சில நாட்களுக்கு முன்பு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பொழுது உச்ச நீதிமன்றத்தின் உத்திரவை செயல் படுத்தி நடுவர் மன்றம் அமைத்திட வேண்டும் என அழுத்தம் கொடுத்தேன் அதற்கு விரைவில் நடுவர் மன்றம் அமைக்கப் படும் என்று தெரிவித்உதள்ளார். என்றார்.

75 வது சுதந்திர தின நினைவுத் தூண் சென்னையில் எப்பொழுது அமைக்கப் படும் என்ற கேள்விக்கு அவர் இதற்கான அரசாணை நிதி ஒதுக்கீடு ஆகியவை விரைவில் வழங்கப் படும் அதனைத் தொடர்ந்து நினைவுத்தூண் அமைக்கும் பணி ஒரு மாத த்தில் முடிக்கப் படும் என்றார்.

மேலும் உங்கள் அரசின் 100 நாட்கள் சாதனை என்று எதைக் கூறுவீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உயிர்காக்கும் பணியே அரசின் முதற்கடமை அந்த வகையில் கடந்த மூன்று மாதமாக நமது முதலமைச்சர் 24 மணி நேரமும் செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றியுள்ளார் மற்றச் சாதனைகளை விட இதையே முக்கிய சாதனையாக கருதுகிறேன் மேலும் பதவி ஏற்ற பொழுது முதலமைச்சர் கையெழுத்திட்ட ஐந்துத் திட்டங்களும் முக்கியமானவை அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். என்றார்.

கிருஷ்ணா தண்ணீரை குழாய் அமைத்து அதன் மூலம் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு இத்திட்டம் செயல்படுத்தும் பொழுதே புட்டபர்த்தி சாய்பாபா அவர்கள் ஒரு திட்டத்தை என்னிடம் கூறினார் தண்ணீர் செல்லும் வழியில் அது வீணாவதைத் தவிர்க்க குழாய் அமைத்து தண்ணீர் அனுப்பலாம் அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறினார். ஆனால் அப்பொழுதுயிருந்த அரசு அதை நிராகரித்து விட்டது. உலக வங்கி உதவி ரூ.1300 கோடி மதிப்பீட்டில் கீழ்பவானி கால்வாய்கள் புனரமைக்கும் பணி எடுக்கப் பட்டுள்ளது. திட்டத்தின் படி தண்ணீர் தடையின்றி வேகமாக செல்ல வசதியாக இருபக்க கரைகள் மற்றும் தரைகள் சிமெண்ட் கான்கீரிட்டால் அமைக்கப் பட வேண்டும் என்று உள்ளது. இதை செயல்படுத்தினால் நீர் ஊர்வது தடைப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் தடைப்படும் மற்றும் அருகில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயராது எனக் கூறி அப்பகுதி விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆகவே தரையில் சிமிண்ட் கான்கீரிட் போடுவதை தவிர்த்துவிட்டு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம். இது குறித்து விவசாயிகளிடம் மாவட்ட அமைச்சர் பொதுப்பணித்துறை செயலாளர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தாவிட்டால் ரூ.1300 கோடி உலக வங்கிக்கு திரும்ப சென்று விடும் .என்றார்.  மற்றொறு கேள்வியானகேரளா தமிழ்நாடு நதிநீர் பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரை முருகன் இரண்டு மாநில அரசுகளாலும் அமைக்கப் பட்ட பேச்சு வார்த்தைக் குழு இரண்டு அமர்வுகள் பேசிவுள்ளார்கள் அடுத்த அமர்வு கேரளாவில் நடைப்பெற வேண்டும் இரு மாநிலப் பொதுப்பணித்துறை செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச்சு வார்த்தைக்கான தேதியை முடிவுச் செய்வார்கள் அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை விரைவில் நடைப்பெறும் இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here