சென்னை மதுரவாயில், செப். 18

கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி  நிறுவனத்தின் புதிய கிளை  மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ திரு. காரப்பாக்கம் கணபதி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 அதில் சிறப்பு விருந்தினராக அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜோசப்  சாமுவேல் அவர்கள் கலந்துகொண்டு  குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

அதனுடன் தமிழ்நாடு  திறன் வழங்குனர்கள் மற்றும் இளைஞர் வளர்ச்சி கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளரும், சிவகங்கை ஒன்றிய பெரும் தலைவருமான திரு பாலச்சந்தர் அவர்களும்  பங்கேற்றார்கள்.

தமிழகத்திலுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலை வாய்ப்பற்ற ஏழ்மையான இளைஞர்களை கிராமத்திலிருந்து அழைத்து வந்து அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதியுடன் மூன்று மாத காலம் DDU-GKY  இச்சட்டத்தில் இலவச பயிற்சி அளித்து, பயிற்சி முடித்த 60 மாணவர்களுக்கு அரசு சான்றிதழுடன் பணி நியமன ஆணையும்  சிறப்பு  விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் தலைவர் சண்முகம் அவர்கள் இது வரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பையும், ஐயாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வெளி நாடுகளில் வேலை வாய்ப்பையும், 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் உருவாக்கியுள்ளோம் என்பதை இந் நிகழ்ச்சியில் பதிவு செய்தார். அதை சிறப்பு விருந்தினர்கள் வெகுவாகப் பாராட்டினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டு விழாவை  சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here