சென்னை, ஆக. 15 –

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகளைப் போற்றி அதனை பேணி பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயன்படும் வகையில் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை செயலாற்றும் வகையில் அமைக்கப் பட்டதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகும்.

மேலும், நாட்டுப் புற கலைகளின் பல்வேறு பரிமாணங்களை உணரும் வகையிலும், அக்கலைகளை அழியாமல் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஈடுப்பட்டுள்ள கலைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களல் தோற்றுவிக்கப் பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதை தொடர்ந்து அதன் புதிய தலைவராக வாகை சந்திர சேகர் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நியமனம் செய்து ஆணைப் பிறப்பிறப்பித்துள்ளதோடு தமிழ்நாடு நாட்டுப் புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் பொறுப்புபையும் அளித்துள்ளார்.

வாகை சந்திர சேகர் கடந்து வந்த பாதை

தமிழ் திரைப்படத் துறையில் வாகை சந்திர சேகர் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தினால், இவரது நடிப்பாற்றாலை பாராட்டி கடந்த 1991 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் திரு மு.கருணாநிதி அவர்களின் தலைமையிலான அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

மேலும் ஒன்றிய அரசால் கடந்த 2003 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாராகவும் பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

அதோடு வேளச்சேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் அத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 முதல் 2021 வரை அத் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பது மேலும் அவர் செயல்பாட்டு திறனுக்கான  சிறப்பு ஆகும்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here