கும்பகோணம், பிப். 13 –

மாசிமக பெருவிழா நான்காம் நாளன இன்றிரவு, கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் இருந்து பெருமாள் தங்ககருட வாகனத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க, வீதியுலாவாக பவனி வர, பெருமாளின் கருட சேவையை ஏராளமானோர் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓர்முறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகபெருவிழா உலக பிரசித்தி பெற்றது. அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒருசேர நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா சைவ தலங்கள் ஆறில் கடந்த 09ம் தேதி புதன் கிழமை அன்றும், தொடர்ந்து வைணவத்தலங்கள் சக்ரபாணிசுவாமி திருக்கோயில், ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் மற்றும் இராஜகோபாலசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்றில் கடந்த 10ம் தேதி வியாழக்கிழமையும் கொடியேற்றம் நடைபெற்றது

விழாவின் நான்காம் நாளான இன்றிரவு, வைணவ தலங்களில் ஒன்றான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி தங்க கருட வாகனத்தில் சிறப்பு பட்டு மற்றும் விNசுஷ மலர் அலங்காரத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தர திரளானோர் பெருமாளின் கருடசேவையை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 17ம் தேதி வியாழக்கிழமை மாசி மகத்தன்று, காலை திருத்தேரோட்டமும் தொடர்ந்து மாலை வைணவ ஸ்தலங்கள் ஐந்தில் இருந்து உற்சவ பெருமாள்கள் காவிரி ஆற்றின் சர்க்கரைப்படித்துறைக்கு எழுந்தருள அங்கு மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here