குடவாசல், மே. 12 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.

இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி.. நேற்று முன்தினம் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை சாமிக்கு திருக்கல்யாண வைபவமும், திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து..

இன்று சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது..50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தேரோட்டத்தை.. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து தூக்கி வைத்தார்.  இதில் திரளான  பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here