சென்னை, மார்ச். 17 –

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர செவிலியர்கள் மற்றும் சிறப்பான முறையில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு அவர்கள் சேவையை பாராட்டி சென்னைமாநகர மேயர் ஆர். பிரியா நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு நேற்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி மேயர் ஆர்.பிரியா அவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

இந்திய அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக கடந்த 27 வருடங்களாக பெருநகர சென்னை மாநகராட்சியில் போலீயோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக போலீயோ நோய் பாதிப்பு இல்லை, எனவே உலக சாகாதார நிறுவன்ம இந்தியாவை போலியோ நோயில்லாத நாடாக அறிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் துவங்கப்பட்டது இந்த முகாம்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை 26 ஆண்டுகள் போலியோ சிறப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 27.02.2022 அன்று நடைப்பெற்ற 27 வது முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 6,19,159 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு தீவிர பல்ஸ் போலீயோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் துணை செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரின் சிறப்பான பணியினைப் பாராட்டி ஒரு மண்டலத்திற்கு ஒரு நகரசெவிலியர் ஒரு துணை செவிலியர் மற்றும் ஒரு அங்கன்வாடி பணியாளர் என மொத்தம் 3 பேர்கள் வீதம் 45 பணியாளர்களுக்கு நேற்று நற்சான்றிதழ்களை மேயர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையளரான ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் சுகாதாரம் டாக்டர் எஸ். மனீஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here