மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர வேண்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் கொள்ளிடம் கரையின் ஆற்றங்கரை ஓரத்தில் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளன. இவற்றை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு முன்னர் ( மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை) ஆன்லைன் மூலம் அனுமதி பெற்று கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் மூலம் மணலைப் பெற்று வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக லாரி மற்றும் டிராக்டர்களுக்கு குவாரியில் மணல் அள்ள அனுமதி வழங்கிய அரசு, மாட்டு வண்டிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தேர்தல் வாக்குறுதியாக மாட்டுவண்டிக்கு மணல் அள்ளுவதற்கான உரிமம் வழங்கப்படும் என்று திமுக தெரிவித்திருந்த நிலையில், அதனை தற்போது நிறைவேற்ற வில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாட்டுவண்டிக்கு மணல் அள்ள உரிமம் கேட்டு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மாட்டுவண்டி உரிமையாளர்கள் புகார் அனுப்பியதாகவும், அதற்கு அரசு சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மாட்டுவண்டிகளுக்கு மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள். ஆனால் அதிகாரிகள் ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் இன்னும் மாட்டு வண்டி குவாரியை துவக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று மணல்மேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பொதுப்பணி துறையின் குவாரிகள் பிரிவில் விளக்கம் கேட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவாதம் அளித்தார். மூன்று ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாட்டுவண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பைட்:
வன்னிய சக்கரவர்த்தி மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்க தலைவர்