தஞ்சாவூர், மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட பொறுப்பாளர் ரஜினிகணேசன் தலைமையில் நிர்வாகிகள், ரசிகர்கள் என தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் கூறும் போது, கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஊழல், வாரிசு அரசியல், போதை கலாச்சாரம் ஆகியவற்றைப் பார்த்து மிகப் பெரிய வெறுப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதெனவும், அதனால் பாஜக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவித் அவர் தனது வெற்றி என்பது தொகுதி வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வர உதவிடும் என்றார்.

திமுக ஜெயித்தால் பார்லிமென்ட்க்கு சென்று வடை சாப்பிடலாம், கடந்த முறை வெற்றி பெற்று தொகுதிக்கு என்ன செய்துள்ளார்கள் என்றும் முதலமைச்சர் டெல்டாகாரன் என்று கூறுகிறார்.  ஆனால் டெல்டா தொகுதிக்கு அமைச்சரை கொடுக்கவே 2 வருடம் ஆகிவிட்டது என்றும் திமுக கட்சியினரே திமுக எம்எல்ஏவை வாக்கு கேட்க அழைத்து வராதீர்கள் என்று சொல்லும் போது அவருடைய பணி எந்த அளவிற்கு இருக்கும் எனவும் வினாவினார்.

பேட்டி: முருகானந்தம் பாஜக வேட்பாளர் தஞ்சை தொகுதி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here