ராமநாதபுரம், ஜூலை28- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் சந்தைதிடலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழாவான அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன் டாக்டர் ராமதாஸ் 80வது பிறந்தநாள் விழா அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் என மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அக்கிம் தலைமையில் டாக்டர் ராமதாஸ் 80 அகவை முத்துவிழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் மாணவர் சங்க மாநில செயலாளர் செஞ்சி ரவி, ஸ்ரீராம் அய்யர் ஆகியோர் சிறப்பு  விருந்தினராக பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி மது ஒழிப்பிற்காக போராடி வருவதையும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதையும் குறித்து பேசினர்.

மாநில துணை பொது செயலாளர் ராஜ்குமார், சமூக ஊடகம் பேரவை மாநில செயலாளர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் (மேற்கு) தங்கராஜ்,, மாநில துணை தலைவர் அறிவழகன், மாவட்ட தலைவர் (கிழக்கு) ஜீவா, மாவட்ட அமைப்பு செயலாளர் அம்ஜத்கான்  ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் போராட்டம் குறித்து வரிவாக பேசினர். முன்னதாக மாவட்ட பொருளாளர் ஆயிசா வரவேற்றார். கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ராமநாதபுரம் நகர் செயலாளர் தாரிக், ஒன்றிய செயலாளர் ஜெமிஸ்கான், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் சரவணன், ராஜேந்திரன், சரவணமுத்து உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் அக்கிம் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு சட்டசபையிலும் சரி, லோக்சபாவிலும் சரி குரல் கொடுக்க பாட்டாளி மக்களின் கட்சியின் நிறுவனர் டாக்டர் அய்யா மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்தான் தெடார்ந்து குரல் கொடுக்கின்றனர் அவர்களின் குரலால்தான் தமிழகத்தில் ஒரளவாவது நல்லது நடந்து கொண்டு இருக்கிறது என்றார். மாநில மாணவ சங்க துணை செயலாளர் முகம்மது ஆசிக் நன்றி கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here