தஞ்சாவூர், ஏப். 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதுப்போல் இந்த ஆண்டு கடந்த 6 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் காலை – மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

பெரிய கோவிலில் இருந்து தியாகராசர் – கமலாம்பாள் உற்சவமேனிகள் தேரில்  எழுந்தருள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். 43 டன் எடையும் – 35 அடி உயரமும் கொண்ட தேரினை ஏராளமான பக்தர்கள் தியாகேசா – ஆருரா, பெருவுடையார் என கோஷங்கள் விண்ணதிர எழுப்பி தேரினை இழுத்தனர்.

தேரினை முன்னிட்டு தஞ்சை மாநகரம் திருவிழா கோலம் பூண்டிருந்தது.  மேலும் இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலின் தேர் கடந்த ஆண்டை விட அகலமாக செய்யப்பட்டதால் தேரின் மேற்பகுதி இரு புறங்களிலும் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் சிக்கியது. அதனால் தேர் அரை மணி நேரம் நின்று சென்றது.

தஞ்சை பெரிய கோயில்  சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் நடைபெறும், இந்த ஆண்டும் கடந்த 6 ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. 15 வது நாளான இன்று தேரோட்டமானது நடைபெற்று வருகிறது. தேர் கடந்த ஆண்டு விட அகலமாக செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தேர் மேல விதி வழியாக சென்ற போது இரு புறங்களில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கியது அதனால் தேர் வழியில் நின்றது. பணியாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தேரினை இழுக்க முடியாததால் தேரின் இரு புறங்களிலும் உள்ள மரங்கள் அறுக்கப்பட்டு அகலம் குறைக்கப்பட்டு ஜேசிபி எந்திரம் கொண்டு தேர் ஆனது சரி செய்யப்பட்டது.

அதனால் சுமார் அரை மணி நேரம் தேர் செல்ல தாமதமானது மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பே அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்து தேரினை அதற்கு தகுந்தார் போல் வடிவமைப்பு செய்து இது போன்ற இடையூறு இல்லாமல் தேரினை கொண்டு செல்ல இந்து அறநிலைத்துறை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பணியின் போது மின் பொறியாளருக்கு லேசான காயமும் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து மின் கம்பத்தில் சிக்கிய தேர். அகற்றம் பணியின் போது இரண்டு மின் ஊழியர்கள் படுகாயம். அலங்கரிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் தேரின் இரண்டு பக்கமும் அலங்கார துணிகள் அகற்றப்பட்டதால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் தேர் தொடங்கும்போதே அருகில் இருந்த விளம்பர போர்டில் சிக்கிக் கொண்டதால் 15 நிமிடங்கள் காலதாமதமாக தேர் புறப்பட்டது. தேர் புறப்பட்டு 100 அடி தூரத்தில் மின் கம்பியில் தேர் உரசியதால் மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மின் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மின் ஊழியர்கள் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் படுகாயம் அடைந்து மண்டை உடைந்தது உடனடியாக அவர்கள் அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மீண்டும் தேர் புறப்பட்டு 10 அடி தூரத்தில் மீண்டும் அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மில் சிக்கிக் கொண்டது.

அதனால் தேரின் இரண்டு பக்கமும் ரம்பங்களால் அறுத்து எடுக்கப்பட்டு அகலம் குறைக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்டு தேர் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் இரண்டு பக்கமும் அலங்கார துணிகள் நீக்கப்பட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் தேர் 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டது.

அதுக்குறித்து பக்தர்கள் கூறுகையில், தஞ்சை தேரடிக்கு தேரின் உயரம் மட்டுமே அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும். ஆனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை ஆணையர் கவிதா என்பவர் தேரின் உயரத்தை குறைத்தும் –  அகலத்தை அதிகப்படுத்தியதும் இதற்கு காரணம். மேலும் இந்த தேருக்கு உள்ள துணியை பயன்படுத்தாமல், வேறு ஆலயத்தில் உள்ள தேர் துணியை பயன்படுத்தினால்தான் அடுத்த அடுத்த விபத்துக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாமிநாதன் மேலவீதி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here