இராமாபுரம், ஏப். 19 –

சென்னை  ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவில் தனது மனைவியுடன் வசித்து வருபவர் 30 வயதான நல்லசிவம் மேலும் இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வருகிறார்.

இந்நிலையில், நல்லசிவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு, இரவு வீடு திரும்பிவுள்ளார். அப்போது அவர் வீட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

மேலும் இதுத்தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கிடையே சின்னதாய் வாக்குவாதம் நடைப்பெற்றுள்ளது. அப்போது அவர்கள் இருவரும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் வேறொரு ஆள் வீட்டிற்குள் வந்து திருடிச் சென்று விட்டானா என்றவாறு ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்பிக் கொண்டு தொடர்ந்து வாக்கு வாத த்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் அதனைத் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் சந்தேகமடைந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மும்முறை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வரும்போதெல்லாம் வீட்டில் வைத்திருந்த சுமார் ரூ. 20 ஆயிரம் வரையிலான பணம் காணாமல் போனதும், மேலும் பூட்டிய வீடு திரும்பி வரும் வரை திறக்கப்படாமல் இருந்தும் பணம் காணாது போவது எப்படி என்றவாறு அவர்கள் இருவரும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

மேலும் அந்த ரகசியம் என்ன என்பதை அறிய நல்லசிவத்தை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவரது மனைவி வெளியில் சென்றுள்ளார். மேலும் இந்நிலையில் அவ்வீடு வெகுநேரமாக பூட்டியிருந்துள்ளது. அந்நேரம் ஒருவர் வீட்டிற்குள் வந்து பணத்தை எடுப்பதை வீட்டிற்குள் மறைந்துயிருந்த நல்லசிவம் அந்த மர்மநபரை கண்டு அதிர்ச்சி அடைந்துவுள்ளார்.

மேலும் வீட்டிற்குள் ஆளிருப்பதைப் பார்த்த அந்தமர்ம நபர் அங்கிருந்து தப்பிவோட முற்பட்டுள்ளார். அவனை தப்பிக்கவிடாமல் தடுத்துநிறுத்தி அவனை சத்தமிட்டவாறு தர்ம அடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நல்லசிவத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மும்முறை வீட்டிற்குள் இருந்த பணத்தை திருடிச்சென்ற விவரம் அறிந்து அவர்களும் நல்லசிவத்துடன் இணைந்து தர்ம அடி கொடுத்து அந்நபரை இராமாபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.

மேலும் அக்கொள்ளையில் ஈடுப்பட்டது பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளநீர் வியாபாரியான 26 வயதுடைய மணிகண்டன் என்பது அப்போது தெரிய வந்தததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும்அதிர்ச்சியுற்றனர்.

மேலும் அக்கொள்ளையில் ஈடுப்பட்ட மணிகண்டனிடம் இராமாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் மேற்கொண்ட விசாரணையில் தான் உல்லாசமாக இருப்பதற்காக அக்கொள்ளையில் ஈடுப்பட்டேன் என்றவாறு அவ்விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மணிகண்டனிடம் தொடர் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினரிடம் அவ்வீட்டின் பூட்டை இழுத்தவுடன் அப்பூட்டு திறந்து விட்டதெனவும் மேலும் பணத்தைக் கொள்ளையடித்து வெளியே வந்தவுடன் அப்பூட்டை பிரஸ் பண்ணியவுடன் அது பூட்டிக்கொண்டது என்றவாறு அவ்வீட்டின் பூட்டை உடைக்காமலே வீட்டிற்குள் சென்று பணத்தை திருடியதுக் குறித்து விளக்கமாக அப்போது தெரிவித்துள்ளார்.

மேலும் தான் திருடிய பணத்தில் புதியதாக செல்போன் வாங்கியதும், உல்லாசமாக செலவு செய்ததாகவும், மேலும் தொடர்ந்து அக்கொள்ளையில் ஈடுப்படும் போது, வீட்டிற்க்குள் நல்லசிவம் மறைந்து இருப்பது தெரியாமல் தான் மாட்டிக்கொண்டாதாகவும் அப்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்விசாரணையைத் தொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒருசெல்போன் ஆகியவற்றை அக்காவல் நிலைய காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் அத்திருட்டு சம்பந்தமாக மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் வேறெங்கும் இதுபோன்ற கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளாரா என்றவாறும் தொடர் விசாரணையை போலீசார் துருவி துருவி மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here