செங்கல்பட்டு, மார்ச். 30 –
ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழிப்புணர்வுப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கிய இவ்விழிப்பணர்வுப் பேரணி, அரசு மருத்துவமனை, இராட்டிணங்கிணறு, வேதாச்சலநகர் ஆகிய நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
மேலும் இவ்விழிப்புணர்வு பேரணியில் ஐநூறுக்கும் மேற்பட்ட அரசுக் கலைக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி மாணாக்கர்கள் இப்பேரணியில் பங்கேற்று கைகளில் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடியும் விழிப்புணர்வு முழக்கங்கள் முழங்கியவாறும் சென்றனர்.