ஆவடி, ஜூலை. 01 –

ஆவடி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந் நிகழ்வை ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ஸ்ப்ரிட் தி கார்ப்ஸ் எனும் இயக்கம் இணைந்து நடத்தினார்கள். இந்நிகழ்வில் பலவிதமான ரக மர கன்றுகள் நடப்பட்டது.

ஆவடி காவல் ஆணையாளர் சந்திப்ராய் ரத்தோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து இந்த நிகழ்வினை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து புதியதாக கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்பில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டி ஆவடி காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர்   சுமார் 500  மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களிடையே மரம் வளர்த்தலின் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் ஆவடி துணை ஆணையர், உதவி ஆணையர்கள், மற்றும் ஆய்வாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here