ஆவடி; பட்டாபிராமில் சாலை பாதுகாப்பு விதி விழிப்புணர்வு பேரணி – ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார் 

பட்டாபிராம் ; நவ . 17-

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்ற வழியுறுத்தி இமானுவேல் தனியார் பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப் பேரணியை ஆவடி போக்குவரத்து துணை ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டு, தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்தும், மேலும் பள்ளி, மருத்துமனை பகுதிகளில் அதிவேக வாகன ஒட்டுதல் மற்றும் அலறும் ஒலிப்பான் அடிப்பது போன்றவைகளை வாகன ஒட்டிகள் குறைத்துக் கொள்ள வேண்டும், மேலும் இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் சென்று ஆபத்துக்களை விளைவிக்கும் பயணத்தை மேற் கொள்ளக் கூடாது, மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுதல் விபத்துக்களை ஏற்படுத்தும் அதனை தவிர்த்து ஒப்பற்ற உயிரை உரு குளைத்திடாது தவிர்க்க போக்கு வரத்து சாலை விதிகளை மதிப்போம், இனிதான பயணம் மேற்கொள்வோம் இடர் இல்லா இல்லம் திரும்புவோம் போன்ற பதாகைகள் மற்றும் உரத்த குரலெழுப்பி போக்குவரத்து சாலை விதிகளை வழியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு நகரம் முழுவதும் வலம் வந்தனர்.

 

 

இந்நிகழ்வில் இமானுவேல் பள்ளியின் தாளாளர் பீட்டர் லயன்ஸ் கிளப் கவர்னர் எஸ் வி மாணிக்கம் நந்தகோபால் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here