கும்மிடிப்பூண்டி, ஜன. 19 –

தம்பட்டம்செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பிரிவு இணைந்து பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அந்நிகழ்வில் வேல்ஸ் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் டீன் டாக்டர் குமுதா லிங்கராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது யோகா மைய நிறுவனர் மற்றும் பயிற்சியாளரான சந்தியா மேற்பார்வையில், ஒரே நேரத்தில், 105 மாணவர்கள், தொடர்ந்து, 10 நிமிடங்கள் ஏக பாத ராஜ கபோடாசம் நிலையில் இருந்து உலக சாதனை படைத்தனர்.

மேலும் அவர்களின் அச்சாதனை ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. சாதனை படைத்த பயிற்சி மையத்திற்கும் மாணவ, மாணவியருக்கும் பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான பட்டயம் வழங்கப்பட்டது. வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அந்நிகழ்வில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாணவர்களை உற்சாகப் படுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here