கும்பகோணம், ஜன. 29 –

கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று நண்பகல் வரை நெல் கொள்முதல் செய்யாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர், மேலும் அதனால் ஆத்திரமுற்ற விவசாயிகள் கொள்முதல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் அருகேயுள்ள கடிச்சம்பாடி கிராமத்தில் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய, ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்காண நெல் மூட்டைகளுடன் இரவு பகலாக பல நாட்களாக காத்திருக்கின்றனர் இந்நிலையில் கடிச்சம்பாடியில் நீண்ட நெடிய வற்புறுத்தலுக்கு பிறகு நேற்று தான் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுபடி நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியை பின்பற்றாமல் சுமார் 500 மூட்டை வரை மட்டுமே நேற்று பிடிக்கப்பட்டது, மேலும் விவசாயிகளிடம் நேரடியாக மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் பல விவசாயிகள் விழி பிதுங்கி செய்வதறியாது நிற்கின்றனர், அப்படி தராதவர்கள் நெல் மூட்டைகளை ஏதேதோ காரணம் காட்டி நெல் பிடிக்க மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இன்று இப்படி லஞ்சம் தர முடியாது என கூறி பல விவசாயிகள் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனால் இன்று நண்பகல் வரை இம்மையத்தில் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அலுவலர்கள், தஞ்சை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு என அனைத்து தரப்பினரும் இதில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறாமல் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அரசு உத்தரவுபடி நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும், ஆன்லைன் பதிவுகளில் உள்ள இடர்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் கடிச்சம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here