பொன்னேரி, ஏப். 07 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுகல்லூரியில் ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவியிடம் அதே துறையில்  கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் மகேந்திரன் இவர் தனது செல்போன் மூலமாக மாணவிக்கு தனது வீட்டிற்கு வருமாறும் வா பழகலாம்  எனவும் தவறாக பேசியுள்ளார்.

இப்பிரச்சினைக் குறித்து அந்த மாணவி கடந்த வியாழக்கிழமை கல்லூரி முதல்வர் சேகரிடம் அளித்த புகார் தெரிவித்துள்ளார். அப்புகார் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரி முதல்வர் சேகர் தலைமையில் மகளிர் குறை  தீர்க்கும் மன்றம் மூன்று உதவிப் பேராசிரியர்கள் மூலம் சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் உதவிப் பேராசிரியரிடம் விசாரணை செய்யப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பாக கல்லூரிகளின் இயக்குனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவியிடம் தவறாக செல்போனில் பேசியது குறித்து பொன்னேரி  அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  கல்லூரி உதவிபேராசிரியர் மகேந்திரன் மற்றும் மாணவிய அவர் பெற்றோரிடமும்  கல்லூரி முதல்வர் முன்னிலையில் விசாரணை  நடத்தினர். தற்போது புகாரில் சிக்கியுள்ள உதவி  பேராசிரியர் மீது ஏற்கனவே இது போன்ற சில புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் மாணவியிடம் பேசிய ஆடியோ விவரம் உண்மை நிலவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உதவிப் பேராசிரியரை கைது செய்து விசாரணைக்காக போலீசார் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீசாரின் வாகனத்தை வழிமறித்து நுழைவுவாயில் முன்பாக கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here