கும்பகோணம், மே. 09 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் 28 வயதுடைய தமிழ்வளவன் என்பவர் ஆவார். மேலும் அவர் வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார். மேலும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில், வில்லியவரம்பல் மேலத் தெருவில் உள்ள ஸ்ரீ மீனாட்சி மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுப் போன்று இவ்வாண்டும் இச்சித்திரை திருவிழா சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் நேற்றிரவு தமிழ்வளவன் வில்லியவரம்பல் மீனாட்சி மாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிழாவிற்காக சென்றிருந்தார். இரவு 10:30 மணி அளவில் சுவாமி புறப்பாடு நடைப் பெற்ற போது, அப்பகுதியில் வாணவேடிக்கை நடைபெற்றது.
அப்போது தமிழ்வளவன் ஆலயம் மீது ஏறிய போது ஆலயத்தின் மீது இருந்த சிங்கச்சிலையினைப் பிடித்து மதில் சுவரில் ஏறும் போது, அச்சிலை உடைந்து கை மற்றும் கால் தடுமாறி அவர் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிய அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ் வளவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இத்தகவலயறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி மாரியம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டது.