கும்பகோணம், அக். 05 –

கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து பிரகன்நாயகி தாயருமென பல்வேறு சிவாலயங்களில் இருந்தும் அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி இவ்விழாவில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மேலும், அது போலவே வைணவ தலங்களான சக்கரபாணிசுவாமி,  சாரங்கபாணிசுவாமி, இராமசாமி திருக்கோயில் ஆகியவற்றில் இருந்து உற்சவர் குதிரை வாகனங்களில் கோயில்களில் இருந்து முக்கிய வீதிகள் வழியே அனைத்து திருக்கோயில் சுவாமிகளும் வருகைப்புரிந்து இவ்விழாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொடர்ந்து இத்திரு வீதிவுலா மகாமககுளம் வழியாக சென்று காமராஜர் சாலை வழியாக வந்து ரயில் நிலைய சந்திப்பை சென்றடைந்து, அங்கு அம்பு போடும் வைபவம் நடைபெற்றது. பல்வேறு திருக்கோயில்களில் இருந்து உற்சவர் மற்றும் அம்மன்கள் சிறப்பு மலர் அலங்காரத்திலும், வண்ண வண்ண மின் விளக்கு அலங்காரத்திலும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மிகச் சிறப்பாக நடைப்பெற்ற இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here