சென்னை, ஜூலை 25-

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர்கள் மேலாண்மையில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புக்கான சேர்க்கை தற்போது நடந்து வருகின்றன அதில் சேர்ந்து பயில விருப்பமான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் குறித்து கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ, தொழிலாளர் மேன்மை பட்டப்படிப்பு, எம்.ஏ. பட்டப்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ ( தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேரப்பட்டயப்படிப்பு ) தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் ( வாரிஇறுதி ) பட்டயப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ, எம்.ஏ.படிப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகாmsக்கப் பட்டுள்ளன.பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைப்பெற்றுவருகிறது.

பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பிஜிடி எல்.ஏ. மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட பட்ட மேற்படிப்பு பட்டயப் படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித்தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை மற்றும் பி.ஊஇ.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து ஆரசு ஆணை வெளியிட்டுள்ளது.

விருப்பமுள்ள ப்ளஸ் 2 முடித்த  மாணவர்கள்  பட்டப்படிப்பிற்கும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புக்களுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின் படி தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

மேற்காணும் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெற tilchennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்கள் பெயர் தொலைப்பேசி எண் முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

விண்ணப்ப கட்டணம் ரூ.200 , எஸ்.சி. எஸ்.டி மாணவர்களுக்கு கட்டணம் ரூ.100 ( சாதி சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டும் ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24.08.2021 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200 மற்றும் ரூ.100 வங்கி வரவோலையினை “ The Dirctor,Tamilnadu Institute Of Labour studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் , விரைவு அஞ்சல் கொரியர் மூலம்  அனுப்பி வைக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தகவல்களுக்கு ; ஒருங்கிணைப்பாளர் ( சேர்க்கை ) முனைவர் இரா.ரமேஜ்குமார் உதவி பேராசிரியர், தொடர்பு எண்; 98841 59410 தொழிலாளர் கல்வி நிலையம், மின்வாரிய சாலை, மங்கள புரம் ( அரசு ஐ.டி.ஐ. பின்புறம் ) அம்பத்தூர்,சென்னை 600 098 , தொலைப்பேசி எண்கள்; 044-29567885 – 7886, email :   tilschennai@tn.gov.in  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here