கும்மிடிப்பூண்டி, மே. 04 –
அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டரை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆப்பிள் ஸ்கேன் மற்றும் லேப் சென்டர் கும்மிடிப்பூண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று அதன் திறப்புவிழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
முன்னதாக டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் & மெடிக்கல் சென்டர் மருத்துவ இயக்குநர் டாக்டர். டி.சி.கௌதமன், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி தலைவர் டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் & மெடிக்கல் சென்டர் டாக்டர். தீபாஸ்ரீ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் & மெடிக்கல் சென்டர் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர் சீனிவாசன் மற்றும் க்ளீனிகிள்ஸ் குளோபல் ஹாஸ்பிடல்ஸ் சீனியர் ரேடியாலஜி ஆலோசகர் டாக்டர். விஸ்வந்த் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஆய்வகத்தில் அட்வான்ஸ் 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், டிராக்மில் டஸ்ட், ஃபுல்லி ஆட்டோமடிக் அட்வான்ஸ் டெஸ்டிங், அட்வான்ஸ் என்டோஸ்கோபி போன்ற ஆய்வுகளை துல்லியமாக ஆய்வு செய்யக் கூடிய நவீன தரமான இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் வீரன், நாகராஜ், பரத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.