ஆண்டிப்பட்டி தனியார் திருமண மகாலில் இந்து முன்னணியினர் சார்பில் இந்துக்களுக்கான ஒருநாள் பண்பு பயிற்சி வகுப்பு முகாம் நடைப்பெற்றது.

தேனி; நவ. 19-

அதில் இந்து மதத்தை கீழ்தரமாக விமர்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் மீது கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வழியுறுத்தியும் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்ஜி பேசினார்.

பின்பு இந்து முன்னணி வடக்கு மாவட்டம் சார்பில் ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது; இந்துமத பெருமையையும் இந்து மதத்தையும் வாழ்க்கை நெறியையும் வெளியுலகிற்கு கொண்டு செல்ல இது வரை யாராலும் முடியவில்லை எனவே தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும், இது போன்ற பண்பு பயிற்சி முகாம்களை நடத்தி பயிற்சி பெற்றவர்கள் மூலம் இந்துமத பெருமையை உலகிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம். முக்கியமாக திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தை கீழ்த்தரமாக பேசிவருகிறார் இந்துக் கோவில்களில் உள்ள பொம்மைகள் அசிங்கமானவை என்றும் இந்து மத உணர்வை பின்பற்றும் அனைவரையும் அவர்கள் மனம் நோகும்படி பேசி வருகிறார்.அவருடைய கட்சியிலுள்ள 90% பேர் இந்துக்களாக இருந்தும் இருந்து தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டிக்கத்தக்கது.எனவே அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து முன்னணி சார்பில் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இருக்கின்றோம். மேலும் தற்போது திருவள்ளுவர் இந்துவா இல்லையா என்ற சர்ச்சை மேலோங்கி வருகிறது. திருவள்ளுவர் திருக்குறளை எழுதும் போது கிறிஸ்துவ மதமும் முஸ்லீம் மதம் தோன்ற வில்லை திருவள்ளுவர் இந்துமத கடவுள்களை கோடிட்டு காட்டியுள்ளார். வேறு வழியில்லாமல் திருவள்ளுவரின் காலத்தை பற்றி உலகுக்கு உணர்த்த நிர்ப்பந்தப்படுத்தி ஏற்படுத்தப் பட்டுள்ள மத சார்பற்ற கட்சிகள் தொடர்ந்து இந்து விரோத போக்கை கொண்டுள்ளது. திருக்குறள் பொதுவான எந்த மதத்தையும் சாராத ஒரு பொது மறை நூலாகும் இதற் கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஏழரைக் கோடி ஹிந்துக்களும் தங்கள் வாக்குகள் மூலமாக எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இந்தப் பேட்டியின் போது மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் ஜி மாவட்ட செயலாளர் செல்வம் உமைய ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here