கும்பகோணம், ஜூன். 14 –

கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரகங்களில் ஒன்றாக கருதப்படும் சுக்கிரன் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் இந்தக் கோயிலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு இதுநாள் வரை எந்த கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

மேலும், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த சன்னிதானமாக இருந்து வந்த இந்நிலையில் அவர் மரணமடைந்ததை அடுத்து புதிய சன்னிதானமாக ஸ்ரீஹரிஹர ஞானசம்பந்தர் புதிய சன்னிதானமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும் இவர் கட்டளை சாமியாக இருந்தபோது கஞ்சனூரில் சரிவர கணக்கை முறையாக பராமரிக்காமல் பணத்தை ஊழல் செய்துவிட்டு, தற்போது பதவி ஏற்றுள்ள மதுரை ஆதீனம் கிராம மக்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்.

எனவே கஞ்சனூர் திருக்கோவிலை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த கோயிலை தமிழக அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் உள்ளிட்ட 4 கிராம மக்கள் கஞ்சனூர் சுக்கிரன் கோவில் முன்பு திரண்டு மதுரை ஆதீனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here