கும்பகோணம், செப். 01 –

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

மேலும் அக்கூட்டத்தில் பங்கேற்ற மா மன்ற உறுப்பினர்கள் அத்திட்ட பணிகள் குறித்த நிறை குறைகளை தொடர்ந்து எடுத்துரைத்தனர். மேலும் பருவம் தவறி பெய்கின்ற மழைக்காலங்களிலும், மற்றும் கனமழை காலங்களிலும், அனைத்து வார்டுகளிலும் பாதாளச்சாக்கடையில் ஏற்படும்  அடைப்புகளால் ஏற்படும் கழிவுநீரானது சாலைகளில் ஓடும் நிலை ஏற்படுவதெனவும். அதனால் அச்சாலைகளை கடக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாதாள பராமரிப்பு மேற் கொண்டு வரும் தனியார் பணி ஒப்பந்ததாரர்கள் சரிவர பராமரிப்பு பணிகளில் ஈடுப்படுவதில்லை என அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து அம்மாதிரியான புகார்கள் எழும் பட்சத்தில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் பராமரிப்பு பணியில் ஈடுப்படும் தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியத் தொகை வழங்கப்படாது என மேலும் தெரிவித்தார்.

பாதாளச் சாக்கடை திட்டம் ஏற்கனவே கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் கடந்த 1960, 2006, மற்றும் 2019, ஆம் ஆண்டுகளில் 3 பிரிவுகளாக நடைப்பெற்றுள்ளது. அதனால் தற்போது பழைய பாதாள சாக்கடை திட்டத்தில் பொருத்தப்பட்ட பைப் லைன்க்களின் அளவுகள் மாறுபடுவதாக தெரிய வருகிறது.

மேலும் மேனுவல் மற்றும் குழாய்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதுப் போன்று 10 க்கும் மேற்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை போக்குவரத்து வழிப்பாதைகளில் சரிவர செல்ல முடியாமல் பிரச்சினைகள் உள்ளதெனவும் தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பழைய குழாய்களைப் புணரமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டிலும், விடுபட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ. 20 கோடி தேவைப்படுவதெனவும், அவை அனைத்திற்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என அவ்வாய்வு கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன தெரிவித்தார்.

இந்நிலையில் 2 வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி செந்தில் ஏற்கனவே அப்பிரச்சினைகள் குறித்து தான் பலமுறை மாநகராட்சியில் தெரிவித்து தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டதுதான் மிச்சம் என தெரிவிக்கின்றார்.

வெகு காரசாரமாக நிறைக் குறைகளோடு வாக்குவாதங்களோடு நடைப்பெற்ற அவ்வாய்வுக்கூட்டத்தில் செயற்பொறியாளர்  உதவி பொறியாளர்கள் உள்பட துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here