மீஞ்சூர், செப். 24 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்தும், கொசு ஒழிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல், அதிகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்கும் விதமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது. மேலும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை வகைப்படுத்த பக்கெட் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் அலேக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் குமாரிபுகழேந்தி. ரஜினி, பரிமளாஅருண்குமார், சங்கீதாசேகர், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் மற்றும் குப்பை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி வீதி, வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி வார்டு கவுன்சிலர் திருமதி மோனிகாராஜேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here