நாச்சியார்கோவில், மார்ச். 01 –

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவிலில் காவல்துறையின் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணி சென்றனர்.

திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில் காவல்துறை மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் இரு சக்கர வாகனத்தில் செலெபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தலையில் அனைவரும் தலைக்வசம் அணிந்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் இவ்விழிப்புணர்வு பேரணியில் ஈடுப்பட்டனர். மேலும் இப்பேரணி இன்று அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இப்பேரணியை காவல்துறை ஆய்வாளர் ரேகாராணி ரெட்கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் ரோசரியா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் இப்பேரணியில் புறப்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருநறையூர், நாச்சியார் கோவில்  ஆகியப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று பெருமாள் கோவிலில் முடிவடைந்தது.

மேலும், இப்பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று, விபத்தில்லாப் பயணம், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் இயக்குவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here