சென்னை அம்பத்தூரில் வீட்டின் வாசலின் முன் நிறுத்தி வைத்திருந்த புதிய சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளான். அதனை பதிவு செய்த சிசிடிவி புட்டேஜ்ஜை செல் போனில் படம் பிடித்து காவல் நிலையத்தில் சைக்கிள் சொந்தக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர், செப். 29 –
சென்னை ஆவடி அடுத்த அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் உள்ள பானு நகரில் வசித்து வருபவர் சந்திரகுமார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
வேலைக்கு சென்று வருவதற்காக புதிய சைக்கிள் ஒன்றை வாங்கி வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், வேலைக்கு செல்வதற்காக வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைப் பார்த்த போது, அது திருடுப் போனது தெரிய வந்துள்ளது.
அது குறித்து அக்கம் பக்கம் விசாரித்தும், தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீட்டு சிசிடிவி கேமரா பதிவை பார்த்த போது யாரோ முகம் தெரியாத நபர் சைக்கிளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிசிடிவி புட்டேஜ் பதிவை தனது கைப்பேசியில் பதிவு செய்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் நேரடியாக அவரது வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி கேமாரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த திருட்டை உறுதி செய்து அதனைத் தொடர்ந்து சைக்கிளைத் திருடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.