அம்மையார்குப்பம், ஜன, 8 –

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்மையார்குப்பம் ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியின் வாயிலாக அக்கிராமத்தில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அக்குடிநீர் செல்லும் குழாயில் கிராம நிர்வாக அலுவலகத்தின் அருகே பொறுத்தப்பட்டிருந்த குழாயின் கேட் வால்வு பழுதுப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் சந்தைப்பகுதியிலும், கிராம நிர்வாக அலுவலக வாசல் முன்பும் குடிநீர் வீணாகி அப்பகுதி முழுவதும் பாசிப்படிந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி மற்றும் நோய் பரவும் சூழல் நிலவி வந்தது. அதனை தடுக்கும் விதமாகவும், குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த கேட் வால்வினை பழுது நீக்கி  விரயமாகும் குடிநீரை சேமிக்க வலியுறுத்தியும் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தததை தொடர்ந்து அச் செய்தினை கடந்த டிச 28-2021 ல் தம்பட்டம் நாளேட்டின் மூலம் துறை சார்ந்த அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்து சென்றதை தொடர்ந்து அப்பிரச்சினைக் குறித்து விரைவு நடவடிக்கையை நிர்வாகம் எடுக்கவில்லை என்றாலும் துரித நடவடிக்கையை எடுத்து பழுதுப்பட்ட குடிநீர் குழாய் கேட் வால்வை மாற்றி நடவடிக்கை எடுத்துவுள்ளனர். அந்த நடவடிக்கையை பாரட்டியும் அக்கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துரித நடவடிக்கையில் ஈடுப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஊராட்சி தலைவருக்கும் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

தம்பட்டம் நாளேட்டின் வெளியான டிச-28-2021 செய்தி இணைப்பு …

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை …

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here