தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தேனி;ஜூன்,3-

இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அவர்கள் மரக்கன்று நட்டும் குத்து விளக்கு ஏற்றியும் விழிப்புணர்வு கூட்டத்தில் மது போதை மூலம் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விழிப்புணர்வு கூட்டத்தில் ஒரு மனிதன் மதுவிற்கு அடிமையானவர்களை மறுவாழ்வு பெற வைத்து அவர்களின் வாழ்க்கையை மாற்றிஅமைப்பதற்கு சிறந்த மருத்துவர்கள்  உள்ளனர் என்றும்,

புகையிலை, சிகரெட், மதுபானங்கள் உள்பட பல போதை பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் போன்ற நோய்களால் நம் வாழ்க்கை விரைவில் நாமே அளித்துக் கொள்வதற்கு சமம் என்றும்,

போதை பழக்கத்திற்கு அடிமையான குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை உடனடியாக போதை தடுப்பு மையத்தில் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வுக் கிடைத்திட வழி செய்ய வேண்டும். இதுவரையில் இந்த மருத்துவமனையில் 40 மேற்பட்டோர் பயன் பெற்று உள்ள தாகவும், தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதில் தேனி மாவட்டம்  முதன்மை மாவட்டமாக  இருப்பதாகவும், போதை பழக்கத்திற்கு மாணவ, மாணவிகள் அடிமையானவர்களை பெற்றோர்கள் கண்டித்து  வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக M.இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், பேராசிரியர் (N.R.T) ஆனந்த கிருஷ்ணன்,

இணை பேராசிரியர் ரமேஷ் பூபதி, பாண்டியராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து பொதுமக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி இந்நிகழ்ச்சி வந்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் அறிவுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அரசு தேனி மனநல ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு சிறப்பான முறையில் உதவிகள் செய்த கட்டட பொறியாளர் ஜெகன் அவர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பு செய்தார் மேலும் இதுவரை இலவசமாக கட்டில், உணவு, மருத்துவமனையை சுத்தம் செய்த 5 நபர். ஓட்டல் உரிமையாளர்கள் , மனிதநேய காப்பகத்தினார் மற்றும் உதவிகள் செய்த நபர்களுக்கு மருத்துவ கல்லூரி  முதல்வர் ராஜேந்திரன் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். இந்த மருத்துவ விழிப்புணர்வு முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்துக் கொண்டனார்.     

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here