புதுச்சேரி, ஏப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை புரிகின்றனர். அதனடிப்படையில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு புதுச்சேரியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் விமான சேவை செயல்பட்டு வந்தது.

இதனிடையே வார இறுதி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் கடந்த மார்ச்-1 தேதியில் இருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளாக புதுச்சேரியில் விமானச் சேவையை தொடங்க திட்டமிட்டிருந்த இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மேலும் ஜூன் மாதத்தில் புக்கிங்கையும் தொடங்க உள்ளது. அதன் அடுத்தக் கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு  விமான சேவை தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here