ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மதுரை அப்போலோ மருத்துவ மனையில் தென் தமிழகத்தில் முதன் முறையாக காற்றேற்றல்  (பலூன் டைலேஷன்) முறையில் மூச்சுக் குழாயை விரிவுப் படுத்தி சிகிச்சை அளித்து காப்பாற்றப் பட்டுள்ளார். இந்த அரிய சாதனையை செய்த மருத்துவ குழுவினர் களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  மதுரை அப்போலோ மருத்துவ மனையின் மற்றொரு மைல்கல் என சாதனை புரிந்த டாக்டர் ஹரிகிருஷ்ணன் பெருமையுடன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் மதுரை அப்போலோ மருத்துவ மனையின் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். ஹரிகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:  25 வயது நிரம்பிய இளைஞர் சாலை விபத்தில் தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் நான்கு மாதங்களுக்கு  முன்பு அனுமதிக்கப் பட்டார். முதற் கட்டமாக அவருக்கு மூச்சுப் பெருங் குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு முதலுதவி சிகிச்சைகள் கொடுக்கப் பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பினார். சில நாட்களுக்கு பின்பு அவருக்கு மறுபடியும் சுவாச கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அதனால் மூச்சு குழாய் தொடர்பாக பல சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப் பட்டது ஆனால் எந்த சிகிச்சையும் பலனளிக்க வில்லை. ஆகையால் மூச்சு குழாய்  அறுவை சிகிச்சை மேற் கொள்ள திட்டமிடப் பட்டது. அந்த சிகிச்சை மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை என்பதால் இதற்கு அந்த நோயாளி உடன் படவில்லை மேலும் மாற்று கருத்துக்காக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவ மனைக்கு வந்தார்.

அப்போலோ சிறப்பு மருத்துவ மனையின் நுரையீயல் நோய் சிகிச்சை நிபுணர்கள் இதனை ஆராய்ந்து  கலந்து ஆலோசித்தனர். அந்த சுவாசக் குழாயில் அடைப்பை அகற்றி சுவாச தடையினை நீக்க ஏதேனும் வழியுள்ளதா என கண்டறிந்த போது சுவாசக் குழாயின் உட் சுவர்கள் சிறுத்து இருப்பதை அறிந்தனர். புதிய செயல் முறையான பலூன் டைலேஷன் (காற்றேற்றல் முறை) எனப்படும் சுவாச குழாயில் பலூன் போன்ற கருவி பொருத்தி சுவாச குழாயை விரிவு படுத்தும் செயல் முறையை செய்ய திட்ட மிட்டனர். மேலும் மூச்சுக் குழாயில் செயல் முறையை திட்ட மிட்ட போதிலும் சுவாச பாதையை மிகவும் கவனத்துடன் கண் காணிக்க முடிவு செய்யப் பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட அவருக்கு சுவாச பாதையில் ஏதும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதிக முன்னெச்சரிக்கை யுடன்  தீவிர மருத்துவ நிபுணர்களின் கண் காணிப்பில் மயக்கவியல் நிபுணர்கள் உதவியுடன் பலூன் டைலேஷன் எனப்படும்  ட்ரகியோ பிளாஸ்டி மேற்கொள்ளப் பட்டது. 48 மணிநேர கண் காணிப்பிற்கு பிறகு நோயாளியின் மேல் பக்க சுவாச குழாயின் மூலம் சுவாச பாதையில் பலூன் போன்ற விரித் தன்மையுடைய கருவியை பொருத்தினர். சில மணி நேர கண் காணிப்பிற்கு பிறகு நோயாளியின் சுவாச பாதையில் இஸ்திரத்தன்மை ஏற்பட்டது.  இந்த மொத்த சிகிச்சையும் மிகுந்த கவனத்துட னும் கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப கருவிகளின் தீவிர கண் காணிப்புடன் செயல் படுத்தப்பட்டது. ஏனெனில் எந்த நேரத்திலும் மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க 24 நேர தீவிர கண் காணிப்புக்கு பிறகு நோயாளி எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பினார். இம் முறையான சிகிச்சையை தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ மருத்துவ மனையில் மேற் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிட தக்கது, என்றார். மதுரை அப்போலோ மருத்துவ மனையின் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர். ஹரிகிருஷ்ணன் மயக்கவியல் நிபுணர் டாக்டர் லக்ஷ்மணன் ஆகியோர் ஓர் குழுவாக  இறங்கி இந்த சிகிச்சையை செய்து முடித்ததை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here