திருவள்ளூர் செப் 18 :
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு இருந்த பண்ணூர் சூசையபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (28) என்பவர் பள்ளி அருகே நின்று கொண்டு அந்த வழியாக வருவோர், போவோரை தகாத வார்த்தைகளால் பேசி கொரோனா காலத்தில் பள்ளியை திறந்து வைத்து உள்ளார்கள். என்று கூறி அரசுக்கு எதிராக பேசி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும், இடையூறாக சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஜோசப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.