கும்பகோணம், ஜன. 09 –

கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் உள்ளது சிவராஜ் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் இக் கடையை உடைத்து கடையில் இருந்த 5 லட்சம் பொருட்களை எடுத்துச் சென்ற அக்கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நேற்று நிலவியது.

கும்பகோணம் ரயிலடி அருகில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி ரோட்டில் நடராஜன் என்பவரின் மகன் சிவராஜ் கடந்த 20 ஆண்டுகளாக சிவராஜ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவராஜ் உடல்நிலை பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த சிவராஜூக்கு கலைப்பொன்னி என்ற மனைவியும், மேலும் மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகன் தில்லையரசன் அப்பா நடத்தி வந்த இன்ஜினியரிங் ஒர்க் ஷாப்பை எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இரண்டாவது மகன் காவிய தர்ஷன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மூன்றாவது மகன் பொற்ச்செல்வன் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வருகின்றார்.

கடைசி பெண் குழந்தை பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடையின் உரிமையாளர் சுப்பையன் கடையை அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த முன்னாள் கவுன்சிலர் அசோகன் என்பவரிடம் இடத்தை விற்று விட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அசோகன் கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் மேலும் ரூ 20 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் சிவராஜ் இஞ்ஜினியரிங்க் ஷாப்பை எடுத்து நடத்தி வரும் தில்லையரசனிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் இவ்வளவு பெரிய தொகையை தர இயலாது எனவும் மேலும் ரூ. 50,000 மட்டும் அப்போது கொடுத்துள்ளதாகவும் மறைந்த சிவராஜ் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அப்பணத்தை பெற்றுக்கொண்ட கடை உரிமையாளர் அசோகன் எவ்விதப் பதிலும் கூறாமல் பணத்தை பெற்றுக்கொண்டு, இரவோடு இரவாக கடையில் இருந்த ஐந்து லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களையும் எடுத்துச் சென்று கடையை இடித்து விட்டு சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

.அதனைத் தொடர்ந்து வழக்கம்போல் நேற்று காலை தில்லையரசன் மற்றும் காவிய தர்ஷன் ஆகிய இருவரும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் உள்ள பொருட்களும் மற்றும் கடை இடிந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இந்நிலையில் இதுக்குறித்து கடை உரிமையாளர் அசோகனிடம் தொலைபேசியில் கேட்டபோது பதில் கூறாமல் போனை வைத்து விட்டதாக அவர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடையில் இருந்த பொருட்களையும், கடைக்கு ஏற்கனவே முன் தொகையாக தாங்கள் செலுத்திய மூன்று லட்சத்து 50 ஆயிரத்தையும் திரும்ப தங்களிடம் தர வேண்டும் எனவும், மேலும் குடியிருப்போருக்கு தெரிவிக்காமல், கடையை இடித்தும், கடையில் இருந்த தங்களுக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் சென்று எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும், மானப்பங்கம் விளைவிக்க கூடிய செயலில் ஈடுப்பட்ட கடை உரிமையாளர் அசோகன் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வலியுறுத்தி, தாய் கலைப்பொன்னி தில்லையரசன் காவியதர்ஷன் பொற்ச்செல்வன் மற்றும் குடும்பத்தினருடன் கடை முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து குடும்பத்துடன் ஊற்றி தற்கொலை செய்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டவர்களை மேற்கு  காவல்துறையினர் தடுத்து நிறுத்தி குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here