பொன்னேரி, பிப். 3 –

நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரின் மகன் கதிர்வேல் வயது 18 என்பவர் ஆமூரிலிருந்து பொன்னேரிக்கு கடைக்கு செல்வதற்காக அவருடைய தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பொன்னேரி பஸ் டிப்போ எதிரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரது வாகனத்திற்கு முன் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென சடர்ன் பிரேக் போட்டதால் காரின் பின் பக்கத்தில் கதிர்வேல் மோதி நிலைதடுமாறி கீழ் விழுந்ததில் பின் தலையில் அடிப்பட்டு ரத்தக் காயத்துடன் அதே காரில் அங்கிருந்தவர்கள் அவரை உடனே ஏற்றிச் சென்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்காகாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக் குறித்து விசாரித்து கார் ஓட்டுனர் மேல் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கும் படி கதிர்வேலின் தந்தை சங்கரபாண்டியன் பொன்னேரி காவல்நிலயத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here