திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ….
தமிழக திருக்கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும், பிறந்தாலும்- பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் சுவாமி ஆலயத்தின் புனித தீர்த்தமாக விளங்கக்கூடிய கமலாலய திருக்குளத்தில் “தெப்ப திருவிழா” 22.05.2024 புதன்கிழமை தொடங்கி 24.05.2024 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
சுமார் 500 பேருக்கு மேல் அமரக்கூடிய மிகவும் பிரம்மாண்டமான தெப்பத்தில்.. அருள்மிகு பார்வதி உடனுறை கல்யாண சுந்தரர் எழுந்தருளி திருக்குளத்தில் மூன்று நாட்கள் இரவு தெப்ப உலா நடைபெற உள்ளது.
தெப்பத்தினை சோதனை செய்யும் விதத்தில் இன்று இரவு 21.05.24 இன்று 8 மணி அளவில் தெப்ப வெள்ளோட்டம் நடைபெற்றது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.