திருவாரூர், மார்ச். 01 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடத்தில் தினம் தோறும் குழந்தைகள் வந்து சென்றும் விளையாடியும் பொழுதை கழிக்கும் இடத்தில் இன்று மாலை ஆறடி நீளம் உள்ள கொடிய விஷத்தினை தன்னகத்தேகத்தைக் கொண்ட நல்ல பாம்பு அங்கன்வாடி கட்டிடத்தில் உள்ளே புகுந்திருந்தது.
இந்நிலையில் அதனைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலறிந்து, குடவாசல் தீயணைப்பு துறை அலுவலக ஆய்வாளர் ஜோதிபாசு அவர்கள் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.
இந்நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி குழந்தைகள் வந்து செல்லும் இடம் என்பதால் அங்கு சுற்றி உள்ளவர்களை பயத்தில் திக்கு முக்காட வைத்தது.