கும்பகோணம், மார்ச். 30 –

கும்பகோணத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால் பல்வேறு அரசுத்துறை நிறுவனங்களில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் அப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். 6 லட்சம் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி, மருத்துவத்துறை உட்பட பல துறைகளில் அவுட்சோர்ஸிங் முறையில் பணியிடம் நிரப்புவதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள்.

மேலும் கடந்த தேர்தலின் போது தி.மு.க, இவற்றை நிறைவேற்றுவதாக கூறி உறுதியளித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை மறந்துவிட்டதாக ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சமீபத்திய பட்ஜெட்டிலும் அரசு ஊழியர்களுக்கென அறிவிப்புகள் எதுவும் இல்லாத து வருத்தம் அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை கும்பகோணம்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டார தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடத்தினார்கள்.

மேலும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் ரமேஷ் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் வணிகவரி துறை பணியாளர் சங்கம் தலைவர் சசி மாற்றுத்திறனாளி பாதுகாப்போர் நல சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் பழ அன்புமணி கால்நடை பராமரிப்பு துறை தலைவர் தமிழ்வாணன் வட்ட துணை தலைவர் பிரபாகரன் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் என ஏராளமானோர் இந்த கண்டன மற்றும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here