பொன்னேரி, செப். 17 –
மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்றது. அதன் பகுதியாக நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கி. வேணுகோபால். முன்னாள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா. மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.டி.பானுபிரசாத். மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ். மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார். பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார். மீஞ்சூர் நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் மாரி. மீஞ்சூர் நகர கழக செயலாளர் எம்.வி.தமிழரசன்.உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் பொன்னேரி ஆரணி ஊத்துக்கோட்டை பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய பேரூர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள். பிற அணி அமைப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மின் உயர்வை கண்டித்து கைகளில் பல்வேறு விதமான வாசகங்கள் பொரித்த பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.