மீஞ்சூர், ஏப். 23 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை நேரத்தினை மாற்றி 12 மணி நேர வேலை நேரமாக உயர்த்தி தொழிலாளர்களுக்கு எதிரான மசோதாவை திமுக தலைமையிலான அரசு பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புக்கும் இடையே அதை நிறைவேற்றியது.

மேலும் இந்நிலையில் அக்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உட்பட அச்செயலுக்கு அனைத்துக் கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் அரசுக்கொண்டு வந்த அம்மசோதாவைக் கண்டித்தும் மேலும் அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் சிஐடியு கட்சியினர், மீஞ்சூர் பஜார் வீதியில் திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் அக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.விஜயன் கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தொழிலாளர்களின் 8 மணி நேரமாகயிருந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு அதனை வாய் மொழி வாயிலாக அம் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

அதனை கண்டிக்கின்ற வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிஐடியு வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தோம் எனவும், மேலும், அம்மசோதாவினை அரசு திரும்ப பெறும் வரை தொடர்ந்து தமிழ்நாடு முழுக்க ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றோம் எனவும். மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று மீஞ்சூர் பஜார் வீதியில் எங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்,

இதில் மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கதிரவேல் , கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் குமார் , நாலூர் நாகராஜ், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here