பாபநாசம், ஏப். 23 –
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை அப்குதியில் உள்ள இஸ்லாமியர்கள் வெகுச் சிறப்பாக கொண்டாடினர்கள்.
மேலும் அப்பண்டிகையினை முன்னிட்டு அப்பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைப்பெற்ற சிறப்பு தொழுகையில் ஆண், பெண் இருபாலரும் மேலும் குழந்தைகள் என குடும்பத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து அதில் பங்கேற்றனர்.
மேலும் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் இந்த மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரகவாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இம் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு இருந்து, ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலவுதவிகளை செய்து, ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
மேலும் அந்நாளில் அதிகாலையில் எழுந்து புத்தாடைகள் அணிந்துக் கொண்டு சிறப்பு தொழுகையில் பங்கேற்று அவ்வழிப்பாட்டிற்கு பின் ஒருவருக்கொருவர் அன்புடன் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டனர்.