கும்பகோணம், டிச. 10 –

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் ஒருங்கிணைந்த இரு சக்கர வாகனம் பழுது நீக்குவோர் நண்பர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பொதுக்குழுக்கூட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் முப்பதாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழது நீக்குவோர், தலைமை சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அச்சங்கத்தின் தலைவர் அன்பு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வம், மாநில செயலாளர் குமரவேல், மாநில பொருளாளர் ஜமால் முகமது, மாநில கெளரவ தலைவர் அறிவழகன், மாநில ஆலோசகர் மனோகரன், மாநில துணைத்தலைவர்கள் விஸ்வநாதன், கோபு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், ஜெயச்சந்திரன், சட்ட ஆலோசகர் கார்த்திக் குமார், கௌரவத் தலைவர் எக்ஸ்எல் சேகர், துணைச் செயலாளர் பவுல் பாஸ்கர், சங்க ஆலோசகர் பட்டாபிராமன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தீபாவளி அன்று கொரநாட்டு கருப்பூர் கீழத்தெருவில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் பொறுப்பாளர் சேகரின் வீடு முழுவதும் தீப் பிடித்து எரிந்தது. அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்தினருக்கு மாநில சங்கம் சார்பில் ரூ. 1.25 லட்சம் வழங்கப்பட்டது.

அதுப்போன்று கடந்த 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த மழையால் இருசக்கர வாகன பழுது நீக்குவோரின் சேதம் அடைந்த கடைகளுக்கு தமிழக அரசு ஒரு கடைக்கு முப்பதாயிரம் வழங்க வேண்டும். எனவும், கும்பகோணம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும்,  தஞ்சாவூர் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணியினை விரைந்து முடிக்க வேண்டும், தஞ்சாவூர் விழுப்புரம் இரட்டை வழி ரயில் பாதை அமைக்க வேண்டும், கும்பகோணம் முழுவதும் உள்ள  பாதாள சாக்கடை மேன் ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறாதவாறு நிரந்தரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும், கும்பகோணம் புதிய நகர பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகப் பணியினை விரைந்து முடித்து  பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும், அதிகமான புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனையாவதால், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதால், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வட்டியுடன் கூடிய கடன், எளிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அப்பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here