கும்பகோணம், பிப். 24 –
கும்பகோணம் அருகேவுள்ள இன்னம்பூர் தோப்பு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி வயது 85 இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சரோஜா என்ற மனைவியும் வயது 75 மேலும் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
மேலும் அப்பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்களது புகுந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கலியமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் நடந்து வந்த நிலையில் அவரது மனைவி சரோஜா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்தவரை அவர்களது உறவினர்கள் எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அவர் கடைசி வரை எழுந்திருக்கவில்லை. பின்னர்தான் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இருவரின் சடலத்தையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து கணவன் , மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்து சாவிலும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.