திருவாரூர், செப். 27 –

திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35  வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி நவராத்திரி விழாவினை கொண்டாடி வருகின்றனர்.

இவர்கள் அமைத்திருக்கும் கொலுவில் எம்மதமும்  சம்மதம் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், திருவாரூர் தேர், தாஜ்மஹால், இயேசு பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, மகாபாரதப் போர் காட்சிகளை தத்ரூபமாக கைவினை பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

தனது மகளின் சிறுவயது விருப்பதிற்காக தொடங்கப்பட்ட இந்த நவராத்திரி கொலு தொடர்ந்து கடந்த 35  வருடங்களாக  முப்பதாயிரம் கைவினைப் பொருட்களை கொண்டு பொம்மைகள் செய்து காட்சிக்கு வைத்து வருவதாக அத்தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

அதுப்போன்று இந்த வருடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கொலுவில் புதிய வரவாக இடம் பிடித்துள்ள கேரளா சென்டை ‌மேளம் காட்சிகள், அம்பு படுக்கை,  ஐந்து தேர் காட்சிகள் போன்ற கொலு பொம்மைகளை கழிவு பொருட்களால் கொலு பொம்மைகள் செய்துள்ளனர். மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள பூக்கள் தோரணங்கள் பறவைகள் மிருகங்கள் அனைத்தும் கழிவு பொருட்கள் கொண்டே செய்தது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நவராத்திரி நடைப்பெறும் ஒன்பது நாட்களும் ஏராளமான பொதுமக்கள் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் இந்த இல்லத்திற்கு வந்து கொலு பொம்மைக் காட்சிகளை கண்டுகளித்து செல்கின்றனர் அவர்களுக்கு வரும் போதே குங்குமம் சந்தனம் கொடுத்து வரவேற்பதுடன், கொலு காட்சிகளை பார்த்து விட்டு திரும்பிச் செல்லும் போது  அவர்களுக்கு தாம்பூல பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான பலகாரம் சுண்டல் மிட்டாய்கள்  கொடுத்து மகிழ்கின்றனர்.

பேட்டி: காந்திமதி கோவிந்தசாமி குடவாசல்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here