தஞ்சாவூர் ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி வாழ் மக்களிடையே வியப்பை ஏற்படுத்திவுள்ளது.

மேலும் அச் சிறுமி தான் குழந்தை பருவத்திலிருந்தே  கதை கேட்பதில் ஆர்வம் மிகுந்துயிருந்ததால் தனக்கான அக்கற்பனை சக்தியை வளர்த்துக் கொண்டேன் என்றவாறு தெரிவித்து மேலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஜே.ஜே. நகர் பகுதியில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் – ரேவதி தம்பதியரின் ஒரே மகளான 5 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் 10 வயது சிறுமி இனியா மேலும் அவர் குழந்தை பருவத்திலிருந்தே தனது தாயிடம் கதை கேட்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். தொடர்ந்து ஆங்கில வழி பள்ளியில் கல்விப் பயிலும் அவருக்கு ஆங்கில நீதிக்கதைகளில் உள்ள ஈடுபாடுகளை அறிந்த அவரது தாய் ரேவதி இனியாவிடம் உனக்கு தோன்றிய கதைகளை எழுது நன்றாக வந்தால் புத்தகமாக போடலாம் என்றவாறு அவரை ஊக்கப்படுத்திவுள்ளார். தாயாரின் தூண்டுதலை மகிழ்வாக ஏற்ற இனியா சில மாதங்களிலேயே 12  நீதிக்கதைகளை எழுதி அந்தந்த  கதைகளுக்கேற்ற ஓவியங்களையும் அவரை தீட்டிவுள்ளார்.

மேலும் அவர் எழுதிய நீதிக்கதைகளில் ஆழ்ந்த பொருளும் அழகிய சொற்றொடர்களும் நிறைந்திருந்ததால், அவரின் பெற்றோர்கள் இனியாவின்  சிறுகதைகள் எனும் தலைப்பில்  12 நீதிக்கதைகளை கொண்ட  24 பக்க ஆங்கில நூலை உருவாக்கியுள்ளனர். 10 வயது சிறுமி ஆங்கிலத்தில் நீதிக்கதைகளை எழுதி சாதனை புரிந்ததை இனியாவின் ஆசிரியர்கள்  மற்றும் உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்.

அச்சாதனைக் குறித்து இனியா கூறுகையில்  எனக்கு கதைகள் மேல் அதிக ஆர்வம் அதனால் நான் 12 நீதிக்கதைகளை எழுதினேன் என்றும், தொடர்ந்து கதை எழுதுவேன் என்றும் மேலும் IAS ஆக வேண்டும் என்ற தனது கனவையும் வெளிப்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here