பெங்களூரு:

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து சில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜே.டி.எஸ். கட்சிக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் யாசகம் (பிச்சை) கேட்கவில்லை.
எங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிக தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை. காங்கிரஸ் கட்சியினரும் எங்களின் கவுரவத்துக்கு குறைவராமல் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். என்றாலும் தேர்தல் நெருங்கும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஜே.டி.எஸ். மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண்பார் என நம்புகிறேன்.

மேலும் கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். – காங்கிரஸ் கூட்டணியில் சிறந்த ஆட்சியை வழங்கி வருவதை எனது கடமையாக கொண்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here