சென்னை:

முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் விளையாடும் கனடா வீரர் ரூடி வெர்ஹோப் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

சென்னை ஸ்பார்ட்டன்ஸ் ‘லீக்’ ஆட்டத்தில் கொச்சியிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. சென்னையை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் கொச்சி அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

நேற்று நடந்த முதல் அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் அணி 15-12, 15-9, 16-14 என்ற நேர்செட் கணக்கில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதி ஆட்டம் 22-ந்தேதி நடக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here