பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் கலந்த சாகச படத்தில் நடிக்க உள்ளனர். புதுமுக இயக்குநர் சனந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கொரில்லா படத்தை தயாரித்த ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரிக்க உள்ளார்.

சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here