மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாழும் பொதுமக்களும் நடந்து செல்வதற்கே அச்சமடைகின்றனர்.
இந்த சாலை வழியாக எவ்வளவோ அரசு வாகனங்களும் அதிகாரி வாகனங்களும் சென்றாலும் யாரும் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கூறி வருகிறார்கள் அதன் துறை சார்ந்த அதிகாரியிடம் பொதுமக்கள் தகவல் அறிவித்தும் எந்த நடவடிக்கை இல்லை. இதனை உடன் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















