மயிலாடுதுறை, மே. 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொள்ளிட ஆற்று கரையிலிருந்து, கடந்த ஒரு வாரமாக அம்பானை வேண்டி,காப்பு கட்டி, விரதமிருந்து. , பால்குடம் ஏந்தி பக்தர்கள் வந்து, கோயிலில் மகா மாரியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று மாலை மணல்மேடு பேருராட்சி அருகில் உள்ள சாவடிகுளத்திலிருந்து,காவடி, கரகங்கள் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.. பின், மாரியம்மன் கோயில் எதிரில் அமைக்கப்பட்ட, அலங்கரிகப்பட்ட அம்பாளின் திரு உருவத்தின் முன் தீ குண்டத்தில், சுமார் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள்  தீ மிதித்தனர். மேலும், கரகம் , பால்குடம் வீதி உலாவின் போதில், வானவேடிக்கை வின்னை பிளக்க, மேள தாலம் முழங்க . கிராமந்தோறும் அம்பாளை ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

இந்த 75-ம் ஆண்டு தீ.மீதி திருவிழாவை கான புத்தமங்களம் மகா மாரியம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபடும், குல தெய்வகாரர்கள், மருளாளிகள் என ஆயிரக்கணக்கானோர் கூடி, இத் தீமிதி திருவிழாவை கண்டு, அம்பாளின் அருளை பெற்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here